|
ஹைக்கூ கவிதைகள் - கி.சார்லஸ் Friday , 11th December 2009 04:24:34 PM
புது மெத்தையில்
உறக்கமேயில்லை
தரையில் அம்மா.
* * * * * * * *
தாயிருந்தும்
அனாதையாகிறது
தாலாட்டு
* * * *
கொடியவனுக்கும்
பாடுகிறார்கள்
ஒப்பாரி.
- கி.சார்லஸ்
காரப்பிடாகை
நாகப்பட்டினம்(மாவட்டம்)
மின்னஞ்சல்:
mathi750@yahoo.in |