4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை
காதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக அவர்கள் இந்த விபரீத முடிவை எடுப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ராதிகா கௌசிக், நேற்று காலை நொய்டாவில் தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் நாலாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா ஜீ சேனலில் தொகுப்பாளினியாக பணி புரிந்து வந்தவர். இவர் மேலும் இரண்டு தோழிகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.


சம்பவத்தன்று ராகுல் என்ற சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ராதிகாவுடன் அந்த வீட்டில் இருந்துள்ளார். ராகுலும், ராதிகாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன்னர் ராகுலுக்கும், ராதிகாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ராகுல் கழிவறை சென்றிருந்த நேரத்தில் மாடியில் இருந்து குதித்து ராதிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராதிகாவின் மரணம் விபத்தா, கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.https://goo.gl/n4oW97


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்