tamilkurinji logo
 

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth meets fans in Chennai | tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Actor,Rajinikanth,meets,fans,in,Chennai,|,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

First Published : Thursday , 14th December 2017 07:32:14 PM
Last Updated : Thursday , 14th December 2017 07:32:14 PM


மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth meets fans in Chennai | tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசினார்.

“சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள்” என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்பிறகு 2.0, காலா படங்களில் அவர் பிஸியாகி விட்டார். தற்போது அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.

அடுத்து புதிய படத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அரசியலுக்கு வருதற்காகவே படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி இருக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இந்நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

வரும் டிசம்பர் 26ம் தேதியில் இருந்து, டிசம்பர் 31ம் தேதி வரை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க இருக்கிறார். ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து பேசுவார் என்றும், சந்திப்பு முடிந்ததும் அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth meets fans in Chennai | tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth meets fans in Chennai | tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth meets fans in Chennai | tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆண்டாள் சர்ச்சை; வைரமுத்து மீது போலீஸ் வழக்கு: உயர் நீதிமன்றம் தடை
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதியதாக கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில்

மேலும்...

 தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம்

மேலும்...

 ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து
ஆண்டாள் பற்றி தவறாக பேசிய வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், புண்படுத்துவது என் நோக்கமன்று, என்று வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. தினமணி நாளிதழ்

மேலும்...

 கிடா விருந்து தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்
 கோயிலில் கிடா வெட்டுவது சட்டத்திற்கு புறம்பானது, எனவே கிடா விருந்தை கைவிட வேண்டும் - நடிகர் ரஜினிக்கு, பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.  அப்போது,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in