ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ‘நடப்பு சாம்பியன்’ ரஷ்யாவின் மரியா ஷரபோவா, எஸ்தோனியாவின் கையா கனேபியை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை 6–2 என, எளிதாக கைப்பற்றிய ஷரபோவா, தொடர்ந்து இரண்டாவது செட்டை 6–4 என, வென்றார். முடிவில், 6–2, 6–4 என, வெற்றி பெற்ற ஷரபோவா, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில், ஜெர்மனியின் கெர்பர், ஹங்கேரியின் டிமியா பபோஸ் மோதினர். இதில் அபாரமாக ஆடிய கெர்பர் 6–0, 6–1 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மடிசன் பிரங்லேவை தோற்கடித்தார்.

பெண்கள் பிரிவில் நடந்த மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் பிரான்சின் அலைஸ் கார்னட், ஸ்பெயினின் கார்லா சாரஸ் நவரோ, போலந்தின் பவுலா கனியா, ஜெர்மனியின் சபைன் லிசிக்கி, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் 6–0, 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை தோற்கடித்தார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டஸ்கோ 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் டாரோ டேனியலை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக், ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கர், அர்ஜென்டினாவின் ஜுயன் மொனாகோ, இத்தாலியின் பேபியோ போக்னினி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
https://goo.gl/Ac5cRx


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்