வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள் உயர்ந்து 25,037.54 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குசந்தையான நிப்டி 90.35 புள்ளிகள் உயர்ந்து 7,457.45 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள் மற்றும் பொதுத்துறை பங்குகள் விலை 2% வரை அதிகரித்துள்ளது. நுகர்வோர், ஆட்டோ, மின்சாரம் மற்றும் உலோகத்துறை பங்குகள் விலை 1% வரை உயர்ந்துள்ளது. சன் பார்மா 3.4%; டாடா மோட்டார்ஸ் 2.6% மற்றும் எல் & டி 2.4% வரை அதிகரித்தன.

காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குசந்தையான ஹாங்காங்கின் ஹேங்சேங், 0.39%, ஜப்பானின் நிக்கி 0.73% உயர்ந்து இருந்தன. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.38% அதிகரித்து முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 58.40 ஆக உள்ளது. கடந்த வார இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.52 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/UejDyM


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்