முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை
கனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்
தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளது தெரியவந்து உள்ளது.

கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன்  (33).  இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார். அவரிடம் விசாரணை நடத்திய போது  தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

அவர் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட போலீசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டாலர்கள் செலவு ஏற்பட்டது.

அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவள் மன நலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்குப் பின்னர் மன நலக் காப்பக சிகிச்சையும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

https://goo.gl/REZkhi


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே