முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக்கொண்டால் மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் இந்தக் கீரை தடுப்பதால் இதற்க மூடக்கு அற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்போழுது அழைக்கப்படுகிறது.

இந்தக்கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம் துவையலும் செய்யலாம் பச்சைக்கீரை சிறிதுகசக்கும் ஆனால் சமைத்துப்பின் அவ்வளவாகத் தெரியாது.

முடக்கத்தான் கீரை தோசை

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அத்துடன் இரண்டு கைப்பிடி கிரையையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தோசை போல் சுட்டு சாப்பிடலாம் இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு கைப்பிடி கீரையை மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து சாதாரண தோசைமாவுடன் கலந்து தோசை சுட்டால் கசப்பு சிறிதும் தெரியாது. நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

https://goo.gl/K1v1JE


24 Jun 2012

முடக்கத்தான் கீரை

11 Mar 2012

ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை

12 Jan 2012

ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை

08 Jan 2012

நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை

30 Dec 2011

மணத்தக்காளி

23 Dec 2011

நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை

17 Jul 2010

முருங்கைக் கீரை

21 Feb 2010

அகத்திக் கீரை

30 Nov 2009

முள்ளங்கிக் கீரை!

29 Jul 2009

மணதக்காளி கீரை