மாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா

மாலையில் திருமணம்  சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா
இன்று மாலை டெல்லியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ஐபில் போட்டிகளுக்காக சென்னையில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, தனது பள்ளி தோழியான பிரியங்கா சவுத்ரியை மணக்கிறார்.


சுரேஷ் ரெய்னா–பிரியங்கா சவுத்ரி திருமண நிச்சயதார்த்தம் காசியாபாத் ராஜ்நகரில் உள்ள சுரேஷ் ரெய்னாவின் வீட்டில் நேற்று முன்தினம் எளிய முறையில் நடந்தது.


இதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


இந்த நிலையில் சுரேஷ்ரெய்னா திருமணம் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.

இன்று திருமணம் நடைபெற இருந்தாலும், ஐபில் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, இன்று சென்னையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

திருமணத்திற்காக வலைப்பயிற்சியை முடித்துவிட்டு மாலை 6 மணியளவில் டெல்லி திரும்பும் ரெய்னா, நேரடியாக திருமணம் நடைபெறும் ஓட்டலுக்கு செல்கிறார்.

ஏப்ரல் 9 ஆம் தேதி ஐபில் கிரிகெட் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹனிமூன் செல்வதை ரெய்னா தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் இந்திய கேப்டன் தோனி அவரது மனைவி மற்றும் மகள் ஷிவாவுடன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல், ஷிகர் தவான், விராட் கோலி, ஆர்.பி சிங், பிரவீன் குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்பதால் திருமணம் நடைபெறவுள்ள பகுதியில் விவிஐபி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
https://goo.gl/DLChS6


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்