மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக 15 மாத தடைக்கு பிறகு சமீபத்தில் களம் திரும்பிய 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றவரும், உலக தர வரிசையில் 258–வது இடத்தில் இருப்பவருமான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா, 59–வது இடத்தில் இருக்கும் கனடா வீராங்கனை பவுச்சர்ட்டை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பவுச்சர்ட் 7–5, 2–6, 6–4 என்ற செட் கணக்கில் ‌ஷரபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 5–வது முறையாக ‌ஷரபோவாவை நேருக்கு நேர் சந்தித்த பவுச்சர்ட் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்று இருக்கிறார். ‘‌ஷரபோவா மோசடி பேர்வழி. ஊக்க மருந்து பயன்படுத்திய அவருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும். அதனை விடுத்து அவருக்கு வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கியது தவறானது என்று வெளிப்படையாக விமர்சித்து இருந்த பவுச்சர்ட், ‌ஷரபோவாவை வீழ்த்தியதும் மைதானத்தில் கடுமையாக துள்ளி குதித்து எதிராளிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார்.

வெற்றிக்கு பிறகு பவுச்சர்ட் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டிக்கு முன்பாக நான் கூடுதல் ஊக்கம் பெற்றேன் எனலாம். பல வீராங்கனைகள் தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வழக்கமாக இப்படி வீரர்–வீராங்கனைகள் வாழ்த்து சொல்லமாட்டார்கள். டென்னிஸ் உலகத்தினர் பலரும் ‌ஷரபோவாவுக்கு எதிரான கருத்தில் தான் உள்ளனர். அவர்கள் எனக்கு குறுந்தகவல் மூலம் வாழ்த்தினார்கள். எனக்காக மட்டுமின்றி எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்காகவும் நான் சிறப்பாக செயல்பட்டு ‌ஷரபோவாவை வீழ்த்தினேன்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ‌ஷரபோவா கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மற்றபடி நான் யாரிடம் தோற்றேன் என்பது பற்றியும், என்னை சுற்றி நடக்கும் வி‌ஷயங்கள் குறித்தும் அதிகம் கவலைப்படவில்லை. நானும் ஒரு பெரிய போட்டியாளர் தான். ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் கடினமாக உழைக்கிறோம் என்பதை பொறுத்தே போட்டியின் முடிவு இருக்கும். இன்று என்னுடைய நாளாக அமையவில்லை. இந்த தோல்வி என்னை மேலும் சிறந்த வீராங்கனையாக உருவாக்க வழிவகுக்கும். இந்த தோல்வி வருங்காலங்களில் அதிக போட்டிகள் மற்றும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்’ என்றார்.
https://goo.gl/LBD6qF


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்