மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்
மீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

மீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் அலுவலகங்களில், பணிபுரியும் துறைகளில், பொது இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்தை தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி தொடங்கி வைத்தார். அதன்பின் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகையும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மீடூ இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது புகார் வருமாறு:-

‘ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன்.

பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட்களுக்கு பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். காலையில போய் இறங்கியதும் ஹரிஹரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. மாலை சந்திக்கலாம் என்று கூறி இருந்தார்.

நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் ‘நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னேன். இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களை பார்க்கத்தான்’ என்று சொன்னார்.
என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

இப்போது சிலர், ‘அவர் பெரிய ஆள்; அவரை பத்தில்லாம் ‘மீ டூ’வுல பேசாதீங்க’ன்னு சொன்னாங்க. ‘ஏன் பேசாம இருக்கணும்? பெரிய ஆளுங்கன்னா அப்படி இப்படிதான் நடந்துப்பாங்கன்னு சொல்லிட்டிருந்ததெல்லாம் மலையேறிடுச்சு.

அன்னைக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோச்சு இல்லையா. அதனால நான் பேசியே ஆகணும்னுதான் இதைச் சொல்றேன். இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த புகார் தமிழ், மலையாள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கும் ‘பழசி ராஜா’ படத்தில் சரத்குமார், மம்முட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். பல விருதுகளை குவித்ததோடு பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.
https://goo.gl/qCWjJa


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்