பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

பெப்பர் தேங்காய்பால் சிக்கன்  குழம்பு| pepper thenkaipal chicken kulambu
தேவையான பொருட்கள்

சிக்கன் – அரைக்கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 2
 மிளகுதூள் – 4  ஸ்பூன்
 சீரகத்தூள் – 2  ஸ்பூன்
 இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
 மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தயிர் – 3  ஸ்பூன்
 தேங்காய்பால் – ஒரு கப்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை  மல்லித்தழை  - சிறிதளவு
 எண்ணெய் – 3  ஸ்பூன்

 செய்முறை


சிக்கனை  நறுக்கி   கழுவி வைக்கவும். அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.


வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.


கடாயை அடுப்பில்  வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


தக்காளியையும்   சேர்த்து   வதக்கி  இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.


1 டம்ளர்  தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். சிக்கன் வெந்த உடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும்.

  அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியானவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.


சுவையான  பெப்பர்  தேங்காய்பால் சிக்கன்  குழம்பு ரெடி


https://goo.gl/ZURkV8


22 Dec 2018

நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu

30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu