பாகிஸ்தான் ஆர்ப்பாட்டமான வெற்றி

பாகிஸ்தான் ஆர்ப்பாட்டமான வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆறு ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் துவங்கியது. நேற்று லாகூரில் நடந்த முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.


ஜிம்பாப்வே அணிக்கு மககட்சா 43 ரன்கள் எடுத்தார். சிபாண்டா (13), கவன்ட்ரி (14) ஏமாற்றினர். பொறுப்புடன் விளையாடிய சிகும்பரா அரை (54) சதம் விளாசினார். சீன் வில்லியம்ஸ் (16), சிக்கந்தர் (17) அடுத்தடுத்து கிளம்ப, ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணிக்கு முக்தர், ஷேசாத் ஜோடி பலமான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள்சேர்த்தபோது, ஷேசாத் (55) ஆட்டமிழந்தார். முக்தர் 83 ரன்கள் (45 பந்து) விளாசினார். முகமது ஹபீஸ் (12), சோயப் மாலிக் (7), உமர் அக்மல் (4) நிலைக்கவில்லை. அப்ரிதி ஒரு பவுண்டரி அடிக்க, பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சர்பராஸ் அகமது (3), அப்ரிதி (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
https://goo.gl/t1u7VC


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்