பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில்  சுமார் 1000 கிலோ வெடிகுண்டை வீசி தீவிரவாதிகள் முகாம்களை முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் படையின் இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அர்விந்த கேஜ்ரிவால்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி  நமது நாட்டை பெருமைப்படுத்திய இந்திய விமானப் படையின் பைலட்களின் தைரியத்துக்கு எனது சல்யூட்.

மத்தியப் பிரதேச முதல்வர்  தேவேந்திர பட்னாவீஸ்

இந்திய விமானப் படையை நினைத்து பெருமை கொள்கிறேன். நமது தியாகிகளின் தியாகம் வீண் போகவில்லை.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி

இது இந்திய விமான படை அல்ல... இந்தியாவின் அற்புத வீரர்கள்... ஜெய்ஹிந்த்

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அகிலேஷ் யாதவ்

இந்திய விமானப் படைக்கு எனது  சல்யூட். வாழ்த்துகள்

தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின்

நமது இந்திய விமானப் படையின்  எதிர்பாராத செயலை கண்டு பெருமைக் கொள்கிறேன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

நமது 12 போர் விமானங்கள் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களைத் தாக்கி நாடு திரும்பியுள்ளன. இந்தியா தனது கதாநாயகர்களை  நினைத்து பெருமை கொள்கிறது.
https://goo.gl/KB6YEJ


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்