நெல்லை மட்டன் குழம்பு / nellai mutton kulambu

நெல்லை  மட்டன் குழம்பு / nellai mutton kulambu
தேவையான பொருட்கள்

மட்டன் – அரை கிலோ
சின்ன வெங்காயம்  நறுக்கியது – 20
தக்காளி  நறுக்கியது – 2
 இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
தேங்காய் துருவியது- அரை மூடி
கசகசா -  1 ஸ்பூன்
சீரகம்  -  1 ஸ்பூன்
கரம் மசாலா துாள் - 2 ஸ்பூன்
மஞ்சள்  தூள்  - அரை ஸ்பூன்
மல்லித்தூள் – 3  ஸ்பூன்
மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்


தேங்காய், கசகசா, சிரகம்  சேர்த்து   தண்ணீர் விட்டு  நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

பட்டை – சிறிது
கிராம்பு – 2
சோம்பு  - அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்   -  5 ஸ்பூன்
கடுகு  - 1 ஸ்பூன்
கருவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குக்கரில்   3 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்

பின் கழுவி வைத்துள்ள  மட்டனை  சேர்த்து சிறிது உப்பு சேர்த்து   5  நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கி அதனுடன்  இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 வதங்கியவுடன்     வெங்காயம்,   சேர்த்து  வதக்கி    மசாலா துாள்  அனைத்தையும்  சேர்த்து  5  நிமிடங்கள் வதக்கி அதனுடன்  தக்காளியும்  சேர்த்து வதக்கி  தேவையான அளவு  தண்ணீர்  சேர்த்து  மீண்டும்  சிறிதளவு உப்பு  சேர்த்து  குக்கரை   மூடி   5  விசில் விட்டு வேக வைக்கவும்.

ஸ்டீம் இறங்கியவுடன்  அரைத்த  தேங்காய் விழுது சேர்த்து மேலும்  10  நிமிடங்கள்  நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

பின்பு 1 கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை ,மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

சுவையான மணமான  மட்டன் குழம்பு ரெடி

தேங்காய்  சேர்த்திருப்பதால் காரம் குறைவாக இருந்தால்  2 ஸ்பூன்  மிளகு தூள்  சேர்த்து கொள்ளவும்.





https://goo.gl/TJCSJ6






22 Dec 2018

நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu

30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu