நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்
ஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.

சேலம் மாவட்டம் கூடமலை பகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதாவின்  மறைவிற்குப் பிறகு, இந்த ஆட்சி கலைந்துவிடும், தான் முதல்வராகிவிடலாம் என்று கனவு கண்டிருந்தார், அந்தக் கனவு பகல் கனவாகிவிட்டது.

டி.டி.வி தினகரனும் திமுக-வின் தூண்டுதலில், இந்தக் கட்சியை உடைக்க ஒரு கட்சியை ஆரம்பித்தார்.  இன்றைக்கு பாலாஜி என்கிற ஒரு செங்கல் பெயர்ந்து விழுந்து விட்டது.

அவரை முதலமைச்சராக வேண்டும் என்று எங்களிடமிருந்து பிரிந்து சென்றார், இப்பொழுது ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று சென்றிருக்கிறார்.  கடைசியில், யாருடன் நடுத்தெருவில் நிற்கப் போகிறாரோ தெரியவில்லை.  இதை எதற்காக சொல்கிறேனென்றால், திமுக-விற்கு கொள்கை, கோட்பாடே கிடையாது, அதிகாரம் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை.

பாரதீய ஜனதா ஆட்சியின்பொழுது, கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்கள்.  அதற்கு சறுக்கல் வந்தவுடன், காங்கிரசிடம் கூட்டு சேர்ந்து அங்கே மத்திய அமைச்சராக இருந்தார்கள்,  அவர்களுக்குத் தேவை அதிகாரம் ஒன்றுதான்.  14 ஆண்டுகாலம் தொடர்ந்து மத்தியில் ஆட்சிசெய்த ஒரு கட்சி திமுக தான், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, அவர்கள் குடும்பம்தான் வளர்ந்தது, கருணாநிதி, அவருடைய பையன், இப்பொழுது பேரனும் வந்துவிட்டார், எல்லாம் வாரிசு.

அதிமுக-வில் திறமை இருப்பவர்கள்,  மக்களுக்கு உழைப்பவர்கள்தான் பதவிக்கு வரமுடியும்,  சாதாரண தொண்டன், விவசாயத் தொழிலாளி கூட வரலாம்.

14 ஆண்டுகாலம் மத்தியில் திமுக ஆட்சி செய்தபொழுது, தமிழகத்திற்கு தேவையான தொழிற்சாலைகளை கொண்டு வந்திருக்கலாம், புதிய, புதிய திட்டங்களை போடுவதற்கு நிதியை பெற்றுத் தந்திருக்கலாம், ஒன்றும் கொண்டு வரவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதாவது பாடுபட்டார்களா? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்தான் இவற்றையெல்லாம் செய்ய முடியும், அந்த வாய்ப்பு திமுக-விற்கு இருந்தும் செய்யவில்லை.

மக்களைப் பற்றி கவலையில்லை, அவர்களுடைய வீட்டு மக்களைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.  யார் பெரியவன் என்று சர்வே போட்டு, மூன்று பேரை எரித்தே கொன்றார்கள்.  இவையெல்லாம் கடந்தகால வரலாறு. அதிமுக ஆட்சியில், மக்களைப் பற்றி சிந்திப்பதுதான் அரசின் கடமை.  உங்கள் துணையோடு, நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்,  ஏனென்றால், மக்கள்தான் நீதிபதி.

 நீங்கள் எத்தனை கட்சியில் கூட்டு சேர்ந்தாலும், மக்கள் நினைத்தால்தான் வெற்றி பெற முடியும்.  ஆனால், நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்திருக்கின்றோம், மக்கள் எண்ணுவதை நிறைவேற்றும் விதமாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உழைப்பவர்கள் என்றைக்கும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதற்கு நானே சான்று.  சாதாரண கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, உழைத்து, படிப்படியாக முன்னேறி இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன், உங்களைப் போல் குறுக்கு வழியில் வரவில்லை.  நான் என்று எம்.எல்.ஏ ஆனேனோ, அப்பொழுதுதான் ஸ்டாலினும் எம்.எல்.ஏ ஆனார்.  1989-ல் நான் சேவல் சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் நுழைகின்றபொழுதுதான், ஸ்டாலினும் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு வந்தார்.

ஆனால், ஸ்டாலின் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு.  நான் உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்து, இன்று முதல்வராகியுள்ளேன், நீங்கள் அப்படியல்ல, உங்கள் அப்பா திமுக தலைவராக இருந்தார், முதலமைச்சராக இருந்தார், அதனால் நீங்கள் எம்.எல்.ஏ ஆகி வந்துவிட்டீர்கள்.  கிராமத்தில் பிறந்தவன் முதலமைச்சராக வேண்டுமென்றால் எவ்வளவு கடினம் என்பது மக்களுக்குத் தெரியும்.

 குடும்பத்தில் அப்பன் பணக்காரனாக இருந்தால் கார் வாங்கிக் கொள்ளலாம், தானே சம்பாதித்து கார் வாங்குவது எவ்வளவு கஷ்டம்? நாங்கள் உழைக்கின்றோம், மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுகின்றோம், அதனால், மக்கள் எங்களை வரவேற்கின்றார்கள். மக்களுடைய பிரச்சினைகளை அன்றாடம் தீர்த்துக் கொண்டிருக்கிறோம்.

வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களையெல்லாம் நாடி வந்து வாக்கு கேட்பார்கள், அப்பொழுது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது, நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள், என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று கேளுங்கள்.  ஏனென்றால், அதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால்தான், மத்திய அரசிடம் போராடி அதிக நிதியை கேட்டு திட்டங்களை நிறைவேற்ற முடியும். அந்த வாய்ப்பை அரசுக்கு தொடர்ந்து நல்குங்கள்.   இவ்வாறு எடப்பாடி பேசினார்.
https://goo.gl/DjW4rB


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்