டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே
டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.

லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி,  தீபிகா படுகோனே இடம் பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்தப் பட்டியலில் மொத்தம் 6 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


அமெரிக்காவுக்கு வெளியே உள்ள வீரர்களாக கோலியும், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரும் இடம்பெற்றுள்ளார். மற்ற 4 பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


இதேபோல் ஓலா கேப்ஸ் ஓனர் பவானிஷ் அகர்வால், நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மைக்ரோசாப்டின் தலைவரான சத்ய நாதெல்லா இடம்பெற்று உள்ளார்.

தீபிகா படுகோனே இந்திப் படங்களிலிருந்து ஹாலிவுட் படங்கள் வரை சென்றுவிட்டார். அவரைப் பற்றிய தகவலை அவருடன் நடித்த ஹாலிவுட் நடிகரான வின் டீசல் தான் எழுதியிருக்கிறார்.


 "தீபிகா இந்தியாவிற்கு மட்டும் பிரதிநிதியாக இல்லை, இந்த உலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தீபிகா படுகேனே மற்றும் வீராட் கோலிக்கு  பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


இந்த ஆண்டு பட்டியலில் டொனால்டு டிரம்ப் நடிகை நிக்கோல் கிட்மேன், நடிகர் கலா காடோட், இளவரசர் ஹாரி, அவரது எதிர்கால மனைவி மேகன் மார்கெல், லண்டன் மேயர் சாதிக் கான், கனடிய பிரதம மந்திரி ஜஸ்டின் டிரூடியோ, சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-ஐன், அயர்லாந்து பிரதம மந்திரி லியோ வரத்கர், பிரதமர் ஷீக் ஹசினா மற்றும் பாடகர் ரிஹானா. ஜெனிபர் லூபாஸ்,ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற இளைய ஆடை வடிவமைப்பாளர் உட்பட 45 நபர்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள், 14 வயதான நடிகர் மில்லி பாபி பிரவுனனும் அடக்கம்.
https://goo.gl/3pnh5n


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே