சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் அண்ணாசாலை ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் அயனாவரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார் (12 வயது). இவருக்கு 2 காதுகளும் கேட்பதில் குறைபாடு உள்ளது. இந்நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு   பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் மன ரீதியிலும் பாதிப்படைந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் பெற்றோர் தனியாக அமர்ந்து பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது அவர், சிலர் தன்னிடம் பாலியல் ரீதியிலான தொந்தரவில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர்.

அதன்படி பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், மாணவி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த காவலாளி, லிப்ட் ஆபரேட்டர், பிளம்பர் என அடுத்தடுத்து 18 பேர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டதாக அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டர்களான 4 பேர்,  காவலாளிகளான 5 பேர், பிளம்பராக உள்ள 4 பேர் உட்பட மொத்தம் 18 பேரை பிடித்து போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் 6 பேர் முதியவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,  "மாணவியின் தந்தை அதிகாலை பணிக்குச் சென்றால் மீண்டும் இரவில்தான் வீடு திரும்புவார். தாயாரும் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே, மாணவி அடுக்குமாடியில் உள்ள லிப்ட் வழியாக தினமும் தனியாக இறங்கி கீழே வந்து பின்னர், வாகனம் மூலம் பள்ளிக்குச் சென்றுள்ளார். லிப்ட்டில் மாணவி வரும்போது லிப்ட் ஆபரேட்டர் ஒருவர் முதல் முதலில் மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில்   ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.

பின்னர், அவர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வரும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதே பாணியில் கடந்த 7 மாதமாக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.
https://goo.gl/ZuNV4r


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்