சில பேர் மீதான #MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றது: ஏ.ஆர்.ரஹ்மான்

சில பேர் மீதான #MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றது: ஏ.ஆர்.ரஹ்மான்
#MeToo இயக்கம் மூலமாக சினிமா உள்பட பல துறைகளை சேர்ந்த பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் “பாலியல் புகார் கூறுபவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் பெயர்கள் இவற்றை கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

சினிமா உலகில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொல்லாமல் புழுங்கி கொண்டிருந்த நடிகைகள், சமூக வலைதளங்களில், மீடூ (#MeToo) இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் இதனை தொடங்க, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.


பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் இந்த #MeToo சர்ச்சையில் தப்பவில்லை. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், “பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்கள் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமா துறையில் நேர்மையும், பெண்களுக்கு மரியாதையும் இருக்கும் நிலையை காணவே நான் விரும்புகிறேன்.

பாலியல் புகார் தெரிவிப்பவர்களின் பெயர்களும், குற்றச்சாட்டுக்கு உள்ளாவோரின் பெயர்களும் அதிர்ச்சியை அளிக்கின்றது. சாதிக்க வருவோருக்கு எந்த இடையூறும் ஏற்படாத சூழலை உருவாக்க நானும், எனது குழுவினரும் உறுதியேற்றுள்ளோம்.
 பாதிக்கப்பட்டவர்கள் வெளியே பேசுவதற்காக மிகப்பெரிய சுதந்திரத்தை சமூக வலைதளம் கொடுத்தாலும்,அது தவறாக கையாளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
https://goo.gl/q53QTe


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்