கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த வேண்டும்.

* இதுவே தரைமட்டத்திற்கு மேல் வேலை வந்துவிட்டது  என்றால் தினமும் தென்மேற்கே ஆரம்பித்து வடமேற்கு வழியாக வடகிழக்கிற்கு வரவேண்டும். பிறகு தென்மேற்கே ஆரம்பித்து தென்கிழக்கு வழியாக வடகிழக்கே வரவேண்டும்.


தளம் போடும்போது

* வீட்டின் தளம் மற்றும் மாடியில் உள்ள தளம் உள்பட அனைத்து தளங்களும் தென்மேற்கே மேடாகவும், வடகிழக்கில் சற்று தாழ்ந்தும் இருக்கவேண்டும்.

* மாடியில் தண்ணீ ர் வெளியேறும் குழாய் மற்றும் தரையில் தண்ணீ ர் செல்லும் வழி உள்பட வடகிழக்கில் மட்டுமே இருக்கவேண்டும்.

கிணறு மற்றும் போர்வெல்

* மதிற்சுவர் கட்டுவதற்கு முன்பே கிணறு அல்லது போர்வெல் போட்டுவிட வேண்டும். வடகிழக்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் போர்வெல் போடவேண்டும்.


கதவு, ஜன்னல்

* முன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.

* ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10, 20, 30 என்று பூஜ்ஜியத்துடன் வரும் இரட்டைபடை ஆகாது.வீட்டின் பிரதான கதவிற்கு நேராக பாத்திரம் கழுவும் இடம், கைகழுவும் இடம், குழாய், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை இவைகளை நோக்கி இருக்கக் கூடாது.

தூண்கள்

* வீட்டிற்கு போடப்படும் தூண்கள் வட்டவடிவமே சிறந்தது. சதுரம், செவ்வக வடிவ தூண்கள் போடப்பட்டால் அது சுவரின் உள்ளே மறையும் படி இருக்கவேண்டும். வெளியே தெரிந்தால் அதன் 4 மூலைகளும் விஷ அம்புகள் அது கெடுதலையே செய்யும்.

* அந்த மாதிரி கட்டி முடித்த வீட்டில் இருந்தால் கண்ணாடிகளை பொருத்தலாம். அல்லது செயற்கை கொடிகளை வைத்து சுற்றி அலங்கரித்து முனைகளை மறைக்கலாம்.

https://goo.gl/dvoN9i


17 Jun 2014

அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து

17 Jun 2014

மனை அடி சாஸ்திரம்

17 Jun 2014

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து

05 Nov 2013

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்

05 Nov 2013

நிம்மதியான வாழ்வு நிலைத்திட

19 Aug 2013

மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து

19 Aug 2013

அலுவலக அறை வாஸ்து

25 Jul 2013

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து

25 Jul 2013

கதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து

25 Jul 2013

வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்