ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்
வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்

வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, மொகித் சர்மா ரூ. 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.


ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது.


இதில் வெளிநாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான வீரர்கள், ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று  நடந்தது.

வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 50 பேரும் வெளிநாட்டு வீரர்கள் 20 பேரும் என 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் அணி ரூ.20.95 கோடியையும், பெங்களூரு அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா அணி ரூ.15.20 கோடியையும், மும்பை அணி ரூ.11.15 கோடியையும், ஐதராபாத் அணி ரூ. 9.70 கோடியையும்,சென்னை அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிடலாம்.

வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. கடந்த 11 வருடமாக ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்த ரிச்சர்ட் மேட்லி இந்த முறை நடத்தவில்லை. ஹக் எட்மீட்ஸ் என்பவர் இந்த வருட ஏலத்தை நடத்துகிறார்.

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு:-

* இந்திய அணி வீரர் ஹனுமான் விகாரியை, ரூ 2 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

* ரூ.50 லட்சம் அடிப்படை விலைக்கு நிர்ணயிக்கப்பட்ட சிம்ரான் ஹெட்மியர் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியால் ரூ. 4.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அடிப்படை விலையில் இருந்து எட்டுமடங்கு விலை போய் உள்ளார்.

* பிரெண்டன் மெக்கலம் விலைபோகவில்லை.

* மார்ட்டின் குப்தில் விலைபோகவில்லை.

* இந்திய வீரர் யுவராஜ் சிங் விலை போகவில்லை.

* மேற்கிந்தியத் தீவு வீரர்  கார்லோஸ் பிராட்வேட் ( அடிப்படை விலை ரூ.75 லட்சம்) ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு விலை போனார்.

* குர்கீரத் சிங்கை (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) ரூ. 50 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர் பெங்களூர்  அணி எடுத்தது.

* கிங்ஸ் பஞ்சாப் அணி மோயஸ் ஹென்றியை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது.

* ஆல் ரவுண்டர் அக்சர் படேலை டெல்லி அணி ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

*   சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ஜானி பேர்ஸ்டோவை ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

* வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன்,  கிங்ஸ்  லெவன் பஞ்சாப் அணியால் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் ரூ.1.2 கோடிக்கு விர்த்திமான் சஹாவை ஏலம் எடுத்து உள்ளது.

* கிறிஸ் ஜோர்டன், நமன் ஓஜா மற்றும் பென் மெக்டெர்மொட் ஆகியோர் விலைபோகவில்லை.

* மனோஜ் திவாரி, சட்டீச்ஸ்வர் புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் விலை போகவில்லை.

* இலங்கை வீரர் லசித் மலிங்கா மும்பை அணிக்காக ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* இந்திய பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டுக்கான ஏல விலை ரூ.8 கோடியை தாண்டியது.  இந்திய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* இந்திய வீரர் முகமது ஷமி பஞ்சாப் அணியால்  ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* வீரர் வருண் ஆரன் ராஜஸ்தான் அணியால்  ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* வீரர் இஷாந்த் சர்மா டெல்லி அணியால் ரூ.1.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* வீரர்  தேவ்தத் படிகல் பெங்களூரு அணிக்கு ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* வீரர்  மொகித் சர்மா ரூ. 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* வீரர்கள் மனன் வோஹ்ரா, சச்சின் பேபி, அன்கீத் பவானே ஆகியோர் ஏலம் போகவில்லை

* வீரர்கள் ஆடம் சம்பா, ராகுல் ஷர்மா, காரி பியரி, பவாத் அஹமது ஆகியோர் ஏலம் போகவில்லை.

* அன்மோல் பிரீத் சிங்  80 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

 * சர்பராஸ் கான், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.25 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

* வருண் சக்கரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப்  அணி.

* வீரர் ஆயுஷ் பதோனியை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
https://goo.gl/EWp4P2


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்