என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்

என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்
பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார்.

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சூத்திரதாரியாக கருதப்பட்டவர் டேவிட் வார்னர். அவருக்கு அடுத்த ஒரு ஆண்டுக்கு சர்வதேச, உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. கனத்த இதயத்துடன் சிட்னி வந்த வார்னர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நடத்த தவறுக்கு தன்னுடைய பங்கும் இருக்கிறது. இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கிறேன். ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேன் என்று கண்ணீருடன் வார்னர் மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமல்லாமல், இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடமாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்த வார்த்தையை கேட்டு அவரின் மனைவி கேண்டிஸ் கண்ணீர் விட்டார்.

இந்நிலையில், வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘சண்டே டெலிகிராப்’ நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் என் கணவர் சிக்கியதற்கும், அந்த தவறைச் செய்ததற்கும் நான்தான் காரணம். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொல்கிறது. முழுமைக்கும் நானே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்பு கோரவில்லை. அவரை மன்னித்துவிடுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால், என்மீதும், என் குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சுக்களுக்கு பதிலடி கொடுக்கவே அவ்வாறு அவர் செய்துவிட்டார்.

எனது கணவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்தபோது, படுக்கை அறையில் என் முன் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்து நானும், எனது குழந்தைகளும் வேதனை அடைந்தோம். அவரின் அழுகை என் இதயத்தை நொறுக்கிவிட்டது.

நாங்கள் கேப்டவுன் டெஸ்ட் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தபோது, என்னுடைய முன்னாள் காதலரின் முகம் வரையப்பட்ட முகமூடியை மாட்டிக்கொண்டு ரசிகர்கள் என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர். என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர், என்னை பாட்டுப்பாடி கிண்டல் செய்தனர். ஆனால், அதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

எனது கணவர் தான் செய்த தவறுக்கு நிச்சயமாக வருந்துவார். அதேசமயம், ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் இருந்து பொறுமையையும், வார்னர் மீது இரக்கமும் வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கேண்டிஸ் வார்னர் தெரிவித்தார்.
https://goo.gl/CoQ2gj


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே