உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்
ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.

எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்

 கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்தான கால்சியம் பெக்டேட் உள்ளது. இந்த நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவிப் புரியும். ஆகவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் வயிறு நிரம்புவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் குறைய ஆரம்பிக்கும்.

 வெள்ளரிக்காயில் 90 சதவீத நீர்ச்சத்து உள்ளது மற்றும் இது உடலின் உட்புறம் மற்றும வெளிப்புறத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். இதில் உள்ள நீர்ச்சத்து, கொழுப்புச் செல்களை உடைத்தெறிய உதவும். ஆகவே எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், வெள்ளரிக்காயை தினமும் ஒரு பௌல் சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமலும் தடுக்கும்.

தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தருகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர,  உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

தக்காளி இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மேலும் இதில் பல்வேறு நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும் பீட்டா-கரோட்டீன் மற்றும் இதர கரோட்டினாய்டுகள் உள்ளது. முக்கியமாக தக்காளி புற்றுநோய் மற்றும் இதய நோயின் தாக்கத்தைத் தடுப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைக்க வெறும் உணவுகள் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் அவசியம். அதுவும் மிகவும் சிம்பிளான உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தாலே, உடல் எடையைக் குறைக்கலாம்.

தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை  நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
 
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர,  உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

யோகா உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல நூற்றாண்டுகளாக மேற்கொண்டு வரும் ஒரு ஆரோக்கியமான பயிற்சியாகும். இத்தகைய யோகா ஒருவரது உடல் எடையைக் குறைக்கவும் உதவிப் புரியும்.

ஏனெனில் பல யோகாக்கள் மற்றும் அதன் நிலைகள், உடலின் குறிப்பிட்ட பகுதியை இலக்காக கொண்டு, அப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே தினமும் யோகா செய்து, உடல் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ளுங்கள்.


https://goo.gl/ysasvL


17 Jun 2019

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்

06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்