இஞ்சியின் மகிமை | Ginger

இஞ்சியின் மகிமை | Ginger
இயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது . அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை .


இஞ்சியின் மகிமை பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும் . அதன் மகிமைகள் பற்றி கூறுவார்கள் . பல வருத்தங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக இஞ்சி பயன்படுகின்றது .

  இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும் . இனி இருமல் , சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் . பலன் கிடைக்கும் .

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான் . இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சியும் .

மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு . கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள் .

சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு . சாப்பாடு சமிபாடு அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்தால் உடனே உணவு சமிபாடு அடையும் .

இஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் .

https://goo.gl/pQvjyn


23 Aug 2017

மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil

04 Jul 2017

மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion

28 Jun 2017

பெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips

10 May 2017

கர்ப்பிணி பெண்களின் வயிற்றுவலி குறைய பாட்டி வைத்தியம் | karpa kala valigal

22 Mar 2017

பாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni

16 Mar 2017

கொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்

20 Feb 2017

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

28 Nov 2016

தோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்

08 Nov 2016

வாயுத்தொல்லை மலச்சிக்கல் சரியாக பாட்டி வைத்தியம்

24 Jul 2016

கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு