ஆயுர்வேத குளியல் முறை

ஆயுர்வேத குளியல் முறை
குளிப்பதற்கு முன்:

மிகவும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. நீர்த்தேங்கலில், ஆறு, குளம், அருவிகளில் ஆடையின்றி குளிக்கக் கூடாது. மிகக் குறைந்த அளவுள்ள நீரில் அதாவது குட்டைகளில் குளிக்கக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றவது முதலில் தலையில் ஊற்றிப் பிறகு உடலில் ஊற்ற வேண்டும்.

முகபட்ச வாதம் எனப்படும் முகத்தினை ஒரு பக்கம் இழுத்து வாய் கோணலாக்கி விடும் அர்த்திதம் எனும் வாத நோய் உள்ளவர்கள், கண்வலி, கண் கூச்சம் உள்ளவர், காதில் வலி, இரைச்சல் முதலிய காது நோய் உள்ளவர், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல்,ஜலதோஷம், அஜீரணம் ஆகிய நோய் உடையவர்கள் நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.


குளிக்க இயலாதவர்கள் தலைக்கு ஊற்றாமல் உடலுக்கு மட்டும் ஊற்றிக் குளிக்கலாம். அல்லது உடலைக் குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ நனைத்த துணியால் துடைத்துக் கொள்ளலாம்.
கலங்கிய நீரில் குளிக்கக் கூடாது. நச்சுப்பூச்சுகள், மலம், சிறுநீர், அழுகிய பொருட்கள், புல், குப்பை உள்ள நீர் மற்றும் சூரியன், சந்திரன், வாயு ஆகிய படாததும் புதிதாக மண்ணில் வீழ்ந்த வெள்ளநீர் ஆகியவை குளிப்பதற்கு ஏற்றதல்ல.


கிணறு, குளம் முதலியவற்றிலிருந்து தண்ணீரைக் காலைநேரத்தில் எடுத்து அன்றன்று பயன்படுத்த வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் நீர் அவ்வேளையில் குளிர்ந்து தெளிந்திருக்கும்.
நன்கு வயிறு முட்டச் சாப்பிட்ட பின்னும் நிறைய நீர் குடித்த பின்னும் குளிக்கக் கூடாது.


குளித்த பின்:


குளித்த பின் தோல் நனைந்துள்ள நிலையில் அதைத் துடைத்து விடாமல் ஈரத் தலைமுடியை உதறக் கூடாது. உடம்பு ஈரமாக இருக்கையில் ஆடை உடுத்தக் கூடாது. உடலைத் துடைத்துக் தோலின் ஈரம் உலர்ந்த பின் உடுத்த வேண்டும்.


குளித்த பின் அழுக்கில்லாத தூய்மையாகத் துவைத்த ஆடையை அணிய வேண்டும். ஏனெனில் அவையில் மதிப்பும், புகழும், ஆயுளும், அழகும், மகிழ்வும் கிட்டும்.

பட்டு, கம்பளம், சிவந்த ஆடை, வாயுவையும் கபத்தையும் போக்கும். ஆதலால் குளிர்காலத்தில் அவை அணியத்தக்கவை.


காவி நிற ஆடை புத்தியை வளர்க்கும்.குளிர்ச்சி அளிக்கும். பித்தத்தைப் போக்கும்.மெல்லிய காவி நிற ஆடை மிக நல்லது. கோடையில் அணியத்தக்கது.


வெண்ணிற ஆடை மங்களகரம், குளிரையும் வெப்பத்தையும் தாங்கிடும் குளிர்ச்சியோ, வெப்பமோ தராது. மழைக் காலத்தில் அணியலாம்.

கிழிந்த ஆடை, பிறர் அணிந்த ஆடை, பிறர் சூடிய மலர், பிறர் அணிந்த செருப்பு அணியக் கூடாது.
தூங்கும் போதும், வெளியில் செல்கையிலும், பூஜை செய்யும் போதும் புத்தாடை அணிவது நன்மையை உண்டாக்கும்.

https://goo.gl/1frXTH


04 Oct 2016

இருதயத்தை பாதுகாக்கும் வழிகள் உணவு முறைகள்

23 Jan 2014

ஆயுர்வேத குளியல் முறை

25 Jan 2013

என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!

05 Nov 2012

வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

31 Oct 2012

ரத்த அழுத்தம் குணமாக பெரிய வெங்காயம் சாப்புடுங்க!!

28 Oct 2012

ஸ்லிம் ஆகணுமா சாக்லெட் சாப்புடுங்க!!!

14 Oct 2010

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

04 Sep 2010

காலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்

04 Sep 2010

நடைப் பயிற்சியின் பயன்கள்

26 Oct 2009

இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம்