அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை

அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை  வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்த நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாதுரையின் வீடு மற்றும் உறவினர்கள் திடீர் வீடுகளில் அதிரடியாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.160 கோடி பணமும் 100 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை, சென்னை, மதுரை உள்ளிட்ட 50 இடங்களில் நேற்று காலை 6 மணி அளவில் தொடங்கிய வருமானவரி சோதனை விடிய விடிய நீடித்தது. இன்று 2-வது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஒப்பந்தராரர் செய்யாத்துரை சாலை ஒப்பந்த பணிகளை மட்டுமின்றி குவாரி, நூற்பு ஆலை தொழில் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த அனைத்து தொழில் நிறுவனங்களையும் குறி வைத்தே ஒரே நேரத்தில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் நேற்று காலை 11 மணி அளவில் ரூ.80 கோடி பணம் பிடிபட்டது.

பிற்பகலில் அது 100 கோடியானது. இரவு முழுவதும் நீடித்த இந்த சோதனையில் 120 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இன்று காலை வரையில் ரூ.160 கோடி பணம் பிடிபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்றைய சோதனையுடன் ஒப்பிடுகையில் இன்று நடக்கும் 2-வது நாள் வேட்டையில் வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ள கோடிகளின் மதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது.

300-க்கும் அதிகமான வருமானவரித்துறை அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் மட்டுமின்றி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். எஸ்.பி.கே.நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள பெசன்ட் நகர் டி.வி.எச். நிறுவனமும் சோதனையில் சிக்கியது.

இது ‘‘தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமானதாகும். ஆழ்வார் பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள செய்யாத்துரையின் உறவினர் தீபக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சேத்துபட்டில் உள்ள ஜோன்ஸ் என்பவரது வீடு, மேத்ரா நகரில் உள்ள செய்யாத்துரையின் மகன் நாகராஜின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

சோதனையின் போது வருமான வரி அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் இருந்து தான் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்வார்கள். ஆனால் நேற்றைய சோதனையின் போது கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

சேத்துப்பட்டில் ஜோன்ஸ் காரில் ரூ.25 கோடியும், கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் காரில் இருது ரூ.24 கோடியும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபக் வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கைப்பற்றப்பட்ட மொத்த பணமான ரூ.160 கோடியில் ரூ.69 கோடி ரூபாய் கார்களில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் தொடர்பாகவும், ஒப்பந்ததாரரான செய்யாத் துரையின் மற்ற தொழில்கள் தொடர்பாகவும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹார்ட் டிஸ்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றார்கள்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.100 கோடியில் பெரும்பாலானவை ரூ.2 ஆயிரம் நோட்டுகளாகவே உள்ளன. இவைகளை எண்ணும் பணியும் நடந்து வருகிறது. 100 கிலோ தங்கத்தில் சில நகைகளை தவிர அனைத்தும் தங்க கட்டிகளாகவே மின்னுகின்றன.

இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம் இதில் முறைகேடுகள் நடந்துள்ளதா? முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இதுபோன்ற சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்படும் தங்கத்தில் தங்க கட்டிகள் குறைவாகவும், நகைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். ஆனால் தற்போதைய சோதனையில் தங்க கட்டிகளே அதிகமாக கிடைத்துள்ளது. இவை அனைத்தும் எப்படி வந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.160 கோடி ரொக்கப்பணம் பற்றியும் முழுமையாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள வருமானவரி சோதனைக்கும், நெடுஞ்சாலை ஊழல் புகாருக்கும் தொடர்பு இருக்கிறதோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலை ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


https://goo.gl/xFYTpS


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்