tamilkurinji logo
 

அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

First Published : Monday , 19th June 2017 07:10:35 PM
Last Updated : Monday , 19th June 2017 07:10:35 PM


அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது விதி எண் 110-ன் கீழ் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, கூட்டுறவுத்துறை தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகம் ஏற்படுத்தும் வகையில் 3,900 உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 10 கணினிகள் வழங்கப்படும் என்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20 கணினிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


மேலும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகம் மற்றும் இதர மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிராமப்புர, நடுத்தர பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


உயர்கல்வித்துறை தொடர்பான அறிவிப்பில் 43 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ரூ.210 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 238 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

கூட்டுறவு தொடர்பான அறிவிப்பில் பயோமெட்ரிக் முறைக்காக நியாய விலை கடைகளுக்கு ரூ.40 கோடி மதிப்பில் விரல் ரேகை எந்திரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் 114 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.24 கோடி மதிப்பில் சொந்த கட்டிடம் கட்டப்படும் என்றும் மத்திய கூட்டுறவு சங்க கடன் உச்ச வரம்பு ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சுற்றுசூழல் மற்றும் வனத்துறை தொடர்பான அறிவிப்பில் வன உயிரின தாக்குதலால் உயிர்நீக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கான இழப்பீடு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வழங்கப்படும் என்றும் பவானி ஆற்றின் கரைகளில் ரூ.1 கோடி மதிப்பில் நீர் தர ஆய்வு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



  Tags :  
அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2 வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
கருங்கல் அருகேயுள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் என்ற தாஸ் (57) பில்லி, சூனியம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மனைவிக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில்

மேலும்...

 மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு
மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் மாநில பாட திட்டத்தில்

மேலும்...

 ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிச்சயம் சட்ட சபை தேர்தல் வரும் : ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேலும்...

 பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்னார்.பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்கும். என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.  பொறியியல் படிப்பில் சேருவதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in