tamilkurinji logo
 

அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு-நதிகளை இணைக்க வலியுறுத்த அறிவுறுத்தல் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு-நதிகளை இணைக்க வலியுறுத்த அறிவுறுத்தல்

First Published : Monday , 19th June 2017 12:33:22 PM
Last Updated : Monday , 19th June 2017 12:33:22 PM


அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு-நதிகளை இணைக்க வலியுறுத்த அறிவுறுத்தல் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக அறிவித் திருந்த நிலையில், அவரை தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவு மற்றும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நலக்குறைவு இவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜக பின்புலத்துடன் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக பேச்சு அடிபட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் திடீரென தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ‘‘ஆண்டவன் நினைத்தால் நான் நாளையே அரசியலுக்கு வருவேன்.


உங்களுக்கும் தற்போது வேலை இருக்கிறது. எனக்கும் வேலை இருக்கிறது. இப்போது நாம் வேலையை பார்ப்போம். போர் வரும்போது முடிவு செய்வோம்’’ என்று கூறினார். ‘போர் வரும்போது முடிவு’ என்று அவர் கூறியது தேர்தல் வரும்போது முடிவு செய்வேன் என்றும் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்றும் சூசகமாக ரஜினி தெரிவித்ததாக ரசிகர்களால் கருதப்படுகிறது.

தான் நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதால் அரசியல் களமும் சுறுசுறுப்படைந்துள்ளது. பாஜக தலைவர்கள், ரஜினியை தங்கள் கட்சியில் சேரும்படி வலி யுறுத்தினர். ஆனால், அதற்கு சூசக மாக பதிலளித்த ரஜினிகாந்த்,‘‘ நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். இதில் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்று கூறினார்.

சில நாட்களில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா,‘‘ ரஜினிகாந்தை போன்ற நல்ல மனிதர்கள் அரசிய லுக்கு வர வேண்டும்’’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘‘ஜெய லலிதா, கருணாநிதி ஆகியோர் அரசியல் களத்தில் இல்லாத நிலை யில் ரஜினி அரசியலுக்கு வந்தால் அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடும்’’ என்று தெரிவித்திருந்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் ரஜினி அரசியலுக்கு வருவதை திருமாவளவன் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் தனது புதிய பட மான ‘காலா’ படப்பிடிப்பில் பங் கேற்ற ரஜினி, சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்நிலையில், தென் னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலை மையில் விவசாயிகள் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

பின்னர், இது தொடர்பாக அய்யாக்கண்ணு கூறுகையில், ‘‘ரஜினிகாந்த்தை 16 விவசாயிகள் சந்தித்தோம். அப்போது அவர், தென்னிந்திய தீபகற்ப நதிகளை முதலில் இணைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவர் ஏற்கெனவே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி அளிப்பதாக தெரிவித்திருந்தார். எனவே அந்த தொகையை விரைவில் பிரதமரிடம் அளிக்க வேண்டும் என நாங்கள் ரஜினியை கேட்டுக் கொண்டோம். அவரும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலை யில், அவருடனான விவசாயிகளின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


மும்பையில் ‘காலா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்த், நண்பர்கள், திரைத் துறையினர், சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என பல்வேறு தரப் பினரை சந்தித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ரஜினியை சந் தித்து நீண்ட நேரம் ஆலோசித்த நடிகை கஸ்தூரி, ரஜினி அரசிய லுக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினியை தென் னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தின் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று சந்தித்தார். ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள பாஜக, அவரை முன்னிறுத்துவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.


விவ சாயிகள் பிரச்சினை உள்ளிட்ட முக் கியப் பிரச்சினைகளுக்கு ரஜினி காந்த் மூலம் தீர்வு காண மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற் காகவே அய்யாக்கண்ணு போன் றவர்களுடனான சந்திப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.



  Tags :  
அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு-நதிகளை இணைக்க வலியுறுத்த அறிவுறுத்தல் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு-நதிகளை இணைக்க வலியுறுத்த அறிவுறுத்தல் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு-நதிகளை இணைக்க வலியுறுத்த அறிவுறுத்தல் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2 வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
கருங்கல் அருகேயுள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் என்ற தாஸ் (57) பில்லி, சூனியம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மனைவிக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில்

மேலும்...

 ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிச்சயம் சட்ட சபை தேர்தல் வரும் : ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேலும்...

 மாட்டிறைச்சிவிவகாரம் முதல்வர் எடப்பாடி பதிலைக் கண்டித்து 3 அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!
மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தி இல்லாததால் பேரவையில் இருந்து அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய 3 பேர் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு இளைஞர் பேரவை

மேலும்...

 குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை
 கணவர், 2 மகள்களின் இறுதி சடங்கில்  பங்கேற்காத மனைவியை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர். சென்னை, மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் சங்கர் (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆஷா (32). இவர்களுக்கு கவிதாலயா (13), காவியா (10) ஆகிய இரண்டு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in