tamilkurinji logo
 

கணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்த 2 வது மனைவி கைது,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> தமிழகம்

கணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்த 2 வது மனைவி கைது

First Published : Saturday , 18th March 2017 07:53:00 PM
Last Updated : Saturday , 18th March 2017 07:53:00 PM


கணவனை சுத்தியலால்  அடித்து  கொலை செய்த 2 வது மனைவி கைது,tamil news india news

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், ஆர்.எம்.கே நகர், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (40). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இவரது முதல் மனைவி பேபி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேபி, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றார். தற்போது அவர், விழுப்புரத்தில் குழந்தைகளுடன் வசிக்கிறார்.

இதையடுத்து கணேஷ், சத்யா (32) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெருங்களத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான்.

கடந்த வாரம் கணேஷ், விழுப்புரத்தில் வசிக்கும் முதல் மனைவி பேபியை பார்க்க சென்றார். அங்கு ஒரு நாள் தங்கிய அவர், மீண்டும் சென்னை திரும்பினார். இதை அறிந்த சத்யா, கணவனுடன் தகராறு செய்தார். இந்த சண்டை தினமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு கணேஷ் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சத்யா, மீண்டும் கணவனிடம், முதல் மனைவியை பார்த்துவிட்டு வந்தது பற்றி பேசி தகராறு செய்தார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் பதறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிய சத்யா, அக்கம் பக்கத்தினரை அழைத்து, போதையில் கணவன் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த மருத்துவ குழுவினர், கணேஷை பரிசோதனை செய்தனர். அதில், அவர் இறந்து இருப்பது தெரிந்தது.

தகவலறிந்து பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, சத்யா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.

அதில், முதல் மனைவியை, கடந்த வாரம் கணேஷ் பார்த்துவிட்டு வந்தார். இதனால், இனி எனக்கும், எனது மகனுக்கும் பாதிப்பு ஏற்படும் என பயந்தேன். இதுபோல் அவர் மீண்டும் முதல் மனைவியை தொடர்ந்து பார்த்தால், எங்களை விட்டு பிரிந்து விடுவார் என்ற காரணத்தால், அவருடன் தினமும் சண்டை போட்டேன்.

சம்பவம் நடந்தபோது, அதேபோல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது, ஆமாம் அவ என் பொண்டாட்டிதான். நான் அங்கேதான் போவேன் என திமிராக பேசினார்.


இதனால், ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த சுத்தியலால், கணேஷின் தலையில் வேகமாக அடித்தேன். போதையில் இருந்த கணேஷ் சுருண்டு கீழே விழுந்தார். மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார்.



இதனால், அக்கம் பக்கத்தினரிடம் கூறினேன். ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள், பரிசோதனை செய்து, கணேஷ் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதில், நான் சிக்க மாட்டேன் என நினைத்தேன்.ஆனால், போலீசாரின் விசாரணையில் நானே சிக்கி கொண்டேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.


இதையடுத்து போலீசார், சத்யாவை கைது செய்தனர். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணவனை சுத்தியலால்  அடித்து  கொலை செய்த 2 வது மனைவி கைது,tamil news india news கணவனை சுத்தியலால்  அடித்து  கொலை செய்த 2 வது மனைவி கைது,tamil news india news கணவனை சுத்தியலால்  அடித்து  கொலை செய்த 2 வது மனைவி கைது,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி ,பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை விவரம்:தேர்வு அட்டவணைபிளஸ்2 பொது தேர்வுமார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்02: மொழிப்பாடம் 2ம் தாள்05 ஆங்கிலம் முதல் தாள்06 மொழிப்பாடம் 2ம் தாள்09: வணிகவியல், ஹோம்

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in