tamilkurinji logo
 

ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு,Kamal Hassan's royal meet with Queen Elizabeth II, see pics

Kamal,Hassan's,royal,meet,with,Queen,Elizabeth,II,,see,pics

ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

First Published : Thursday , 2nd March 2017 06:24:54 PM
Last Updated : Thursday , 2nd March 2017 06:24:54 PM


ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு,Kamal Hassan's royal meet with Queen Elizabeth II, see pics

இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவையொட்டி லண்டனில் ராணி எலிசபெத்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.


இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

சரித்திர கதையம்சத்தை கொண்ட கமல்ஹாசனின் லட்சியப்படமான ‘மருதநாயகம்’ படப்பிடிப்பு 1997-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தபோது, அதனை ராணி எலிசபெத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த காட்சிகளுடன் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் நிதி நெருக்கடியால் பட வேலைகள் திடீரென்று நிறுத்தப்பட்டது.


மருதநாயகம் படத்தை தொடர்ந்து படமாக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். ராணி எலிசபெத்தை சந்தித்த போது மருதநாயகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை கமல்ஹாசன் நினைவூட்டினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர்கள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

லண்டனில், இந்தியா- இங்கிலாந்து கலாசார விழாவில் கலந்து கொண்டது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“கலாசார விழாவில் ராணி எலிசபெத்தை சந்தித்தேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். மன்னர் எடின்பரோவும் ஆரோக்கியமாக இருக்கிறார். ராணி எலிசபெத் இந்தியாவுக்கு வந்தபோது எனது படப்பிடிப்பு அரங்குக்கு வந்து இருந்தா

அதுகுறித்து அவரிடம் நான் நினைவுபடுத்தினேன். ராணி எலிசபெத் தனது வாழ்நாளில் கலந்து கொண்ட ஒரே படப்பிடிப்பு என்னுடைய படப்பிடிப்புதான். கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்கள் உரையாடல் சிறியதாகவே இருந்தது”. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.



    Tags :    
ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு,Kamal Hassan's royal meet with Queen Elizabeth II, see pics ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு,Kamal Hassan's royal meet with Queen Elizabeth II, see pics ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு,Kamal Hassan's royal meet with Queen Elizabeth II, see pics
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in