tamilkurinji logo
 

மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,After-legal-notice-of-Ilayaraja-SPB-announces-henceforth.

After-legal-notice-of-Ilayaraja-SPB-announces-henceforth.


மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

First Published : Monday , 20th March 2017 10:53:35 AM
Last Updated : Monday , 20th March 2017 10:53:35 AM


மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,After-legal-notice-of-Ilayaraja-SPB-announces-henceforth.

இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.


இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.



இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். வார இறுதிநாளில் சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் மிக சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.



தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார்.


என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன. அதில், இளையராஜாவிடம் முன்னனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால் அது காப்புரிமை மீறலாகும்.



அவ்வாறான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன், எனக்கு சட்ட விதிமுறைகள் குறித்து தெரியாது.


எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது.


கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை தொடங்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜா அலுவலகத்திடம் இருந்து இதுபோன்ற எந்தஒரு எதிர்ப்பும் வரவில்லை.



ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை. ஏற்கெனவெ கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது.



இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை. அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும்.



இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.



இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது என்னுடைய கோரிக்கையாகும். இது கடவுளின் கட்டளை என்றால், அதனை பணிவுடன் கடைபிடிப்பேன்,” என்று தெரிவித்து உள்ளார்.
 இ

ளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையிலான இப்பிரிவு இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.


மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,After-legal-notice-of-Ilayaraja-SPB-announces-henceforth. மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,After-legal-notice-of-Ilayaraja-SPB-announces-henceforth. மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,After-legal-notice-of-Ilayaraja-SPB-announces-henceforth.
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப்

மேலும்...

 என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா
நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.

மேலும்...

 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர்

மேலும்...

 போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த சன்னிலியோன்
கொச்சிக்கு வருகை புரிந்த சன்னிலியோனை பார்க்க திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in