tamilkurinji logo
 

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News

4,countries,support,resolution,on,Lanka,:,PTI,feed,,News


செய்திகள் >>> உலகம்

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு

First Published : Monday , 20th March 2017 10:39:13 AM
Last Updated : Monday , 20th March 2017 10:39:13 AM


போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News

போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அவகாசம் கேட்கும் இலங்கைக்கு 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன.



போர் இல்லா பிரதேசங்களிலும் அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.



போர்க்குற்றங்களுக்கு விடுதலைப்புலிகள்மீதும், சிங்கள ராணுவம் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூறியது. ஆனால் அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்து வருகிறது.



இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது.இந்த கூட்டத்தில் இலங்கை, ‘‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மனித உரிமைகள் மேம்படுத்துதல்’’ என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.


இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் தந்து வருகின்றன. ஆனால் இதில் இலங்கை 2 ஆண்டுகள் அவகாசம் கேட்கிறது.



அந்த அவகாசத்தை வழங்கி விட்டால், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இன்னும் தள்ளிப்போகும் நிலை உருவாகும். இலங்கையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.


இந்த நிலையில் இலங்கையின் தீர்மானத்துக்கு மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.



    Tags :    
போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் ஆகியோர் சந்திரனுக்கு அப்பல்லோ- 2 விண்கலம் மூலம் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக சென்று வந்தனர்.அப்போது சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்

மேலும்...

 புற்றுநோயால் பாதிக்கபட்ட காதலனை மருத்துவமனையிலே திருமணம் செய்த காதலி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலனை மருத்துவமனையிலேயே காதலி திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரே கெர்ஷா என்பவருக்கும் ட்ரேசிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரே கெர்ஷாவுக்கு உடல்

மேலும்...

 குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல்
பிறந்த குழந்தைகளுக்கு முதல்1 வருடத்திற்குள் பழச்சாறுகளை கொடுக்க கூடாது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.2001-க்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளுக்கான உணவு முறை குறித்த பட்டியலில் இந்த புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்புக்கு முன்பு வரை பிறந்த குழந்தைகளுக்கு 6

மேலும்...

 புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட மணப்பெண்
 சீன மணப்பெண் ஒருவர், புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த புகைப்பட கலைஞர்கள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in