tamilkurinji logo
 

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தாவும்,கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள் .,Keerthy Suresh and Samantha in Savitri biopic?

Keerthy,Suresh,and,Samantha,in,Savitri,biopic?

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தாவும்,கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள் .

First Published : Sunday , 12th March 2017 07:39:44 PM
Last Updated : Sunday , 12th March 2017 07:39:44 PM


பழம்பெரும்  நடிகை  சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு  படத்தில் சமந்தாவும்,கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள் .,Keerthy Suresh and Samantha in Savitri biopic?

பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.

1950, 60, 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சாவித்ரி. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். இதனால், சினிமா உலகம் அவரை நடிகையர் திலகம் என பெயர் சூட்டி மகிழ்ந்தது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். சிவாஜியும், சாவித்ரியும் சேர்ந்து நடித்த ‘பாசமலர்’ படம் காலத்தால் அழியாத காவியம் ஆகும்.

இந்நிலையில், மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராக இருக்கிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள்.

இதில், கீர்த்தி சுரேஷ்தான் சாவித்ரியாக நடிப்பார் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர்.


சமந்தாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், தற்போது சமந்தாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதன்படி, சமந்தா இப்படத்தில் சாவித்ரி காலத்தில் நடித்துவந்த மற்றொரு நடிகையான ஜமுனா ராணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சாவித்ரி நடித்து வந்த காலத்தில் அவருக்கு சக போட்டியாளராக ஜமுனா ராணி திகழ்ந்துள்ளார். இருவருக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




    Tags :    
பழம்பெரும்  நடிகை  சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு  படத்தில் சமந்தாவும்,கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள் .,Keerthy Suresh and Samantha in Savitri biopic? பழம்பெரும்  நடிகை  சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு  படத்தில் சமந்தாவும்,கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள் .,Keerthy Suresh and Samantha in Savitri biopic? பழம்பெரும்  நடிகை  சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு  படத்தில் சமந்தாவும்,கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள் .,Keerthy Suresh and Samantha in Savitri biopic?
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்-'மைனா' நந்தினி உருக்கம்
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமாக பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும் தான் காரணம் என்று

மேலும்...

 பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது’ நடிகை கங்கனா ரணாவத்
‘‘பாலியல் தொல்லை குறித்து பேசுவதற்கு பெண்கள் பயப்பட கூடாது’’ என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.‘‘பாலியல் தொல்லை குறித்து பேசுவதற்கு பெண்கள் பயப்பட கூடாது’’ என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.இந்தி திரைப்பட இயக்குனர் விகாஸ் பால் மீது அவரது திரைப்பட

மேலும்...

 மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்...

 நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மரணம்
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன். இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நே‌ஷனல் பட நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் உள்பட பல படங்களை தயாரித்து உள்ளார். கமல்ஹாசனும் அவரது மகள் சுருதிஹாசனும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in