tamilkurinji logo
 

நடிகை பாவனா திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது,Malayalam actor Bhavana Menon engaged to Kannada produce

Malayalam,actor,Bhavana,Menon,engaged,to,Kannada,produce


நடிகை பாவனா திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது

First Published : Friday , 10th March 2017 01:25:14 PM
Last Updated : Friday , 10th March 2017 01:25:14 PM


நடிகை பாவனா திருமண  நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது,Malayalam actor Bhavana Menon engaged to Kannada produce

நடிகை பாவனா திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது. காதலரும், கன்னட தயாரிப்பாளருமான நவீனை மணக்கிறார்.

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பாவனா. இவர் 2006-ம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார். வெயில், ராமேசுவரம், தீபாவளி, ஆர்யா, வாழ்த்துக்கள், ஜெயம்கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். 4 மொழிகளிலும் 75-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னட மொழியில் பாவனா நடித்த ரோமியோ என்ற படத்தை நவீன் தயாரித்தார். இந்தப்படம் 2012-ம் ஆண்டு வெளியானது. அப்போது பாவனாவுக்கும், நவீனுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் கேரளாவில் மலையாள படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் திரும்பியபோது பாவனாவை சிலர் கடத்தினார்கள். காரிலேயே அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டார்கள். பின்னர் காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டனர். இதுகுறித்து பாவனா போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர்-நடிகைகள் கண்டனம் தெரிவித்தார்கள். குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி பாவனாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த சம்பவத்தால் பாவனா திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியானது. சினிமாவை விட்டு விலகவும் அவர் முடிவு செய்தார்.

ஆனால், மலையாள நடிகர்-நடிகைகள் தொடர்ந்து பாவனா நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து பாவனா மீண்டும் நடிக்கத் தொடங்கினார். பிரித்விராஜூடன் ஆடம் என்ற மலையாள படத்தில் அவர் நடித்து வருகிறார். மீண்டும் பாவனா நடிக்க வந்ததை நடிகர்-நடிகைகள் வரவேற்றனர்.


இந்தநிலையில், பாவனாவுக்கும், அவரது காதலர் நவீனுக்கும் கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று காலை திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பாவனாவின் வீட்டில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், இரு குடும்பத்தைச் சேர்ந்த, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மலையாள நடிகை மஞ்சுவாரியரும் பங்கேற்றார். இந்து முறைப்படி எளிய முறையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்துக்கு வந்தவர்களுடன் பாவனா கலகலப்பாக பேசினார். இந்த வருடம் இறுதியில் பாவனா-நவீன் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை விரைவில் அறிவிக்கிறார்கள்.


நடிகை பாவனா திருமண  நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது,Malayalam actor Bhavana Menon engaged to Kannada produce நடிகை பாவனா திருமண  நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது,Malayalam actor Bhavana Menon engaged to Kannada produce நடிகை பாவனா திருமண  நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது,Malayalam actor Bhavana Menon engaged to Kannada produce
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in