tamilkurinji logo
 

நடிகர் அமீர்கானின் 52–வது பிறந்தநாள் குடும்பத்தினருடன் ‘ கொண்டாடினார்,Aamir Khan to spend 52nd birthday with the Phogat girls, gorge over ...

Aamir,Khan,to,spend,52nd,birthday,with,the,Phogat,girls,,gorge,over,...

நடிகர் அமீர்கானின் 52–வது பிறந்தநாள் குடும்பத்தினருடன் ‘ கொண்டாடினார்

First Published : Wednesday , 15th March 2017 08:45:06 PM
Last Updated : Wednesday , 15th March 2017 08:45:06 PM


நடிகர் அமீர்கானின் 52–வது பிறந்தநாள் குடும்பத்தினருடன் ‘ கொண்டாடினார்,Aamir Khan to spend 52nd birthday with the Phogat girls, gorge over ...

இந்தி நடிகர் அமீர்கான் தன்னுடைய 52–வது பிறந்தநாளை நேற்று மும்பையில் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

இந்தி நடிகர் அமீர்கான் நேற்று 51 வயது முடிந்து, 52–வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அமீர்கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் என்னுடைய குடும்பத்தினருடன் இருப்பேன். ஆனால், இப்போது என்னுடைய குடும்பம் விரிவடைந்து விட்டது. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் குடும்பத்தினரை என்னுடைய குடும்ப உறுப்பினர்களாக நினைக்கிறேன்.


என் பிறந்தநாளை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருந்தால், இன்னமும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

என் பிறந்தநாளையொட்டி, மகாவீர் சிங் போகத் குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்தவொரு பரிசுப்பொருளும் வரவில்லை.


அவர்கள் ஏதாவது தருவார்கள் என்று இன்னமும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

என்னுடைய தாயாரும் பிறந்தநாள் பரிசு தரவில்லை. ஆனால், ஒவ்வொரு பிறந்த நாளன்றும் செய்து தருவது போல், இந்த ஆண்டும் ‘சீக் கேபப்ஸ்’ (ஒரு வகை உணவு) செய்து கொடுத்தார். நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) 12 மணிக்கு வழக்கம்போல், புத்தகம் படித்தேன். அதன்பின்னர், படுத்து தூங்கினேன். காலையில் எழுந்ததும் ஏராளமான வாழ்த்துகள் எனக்காக காத்திருந்தன.

என்னை பொறுத்தமட்டில், படங்களில் நான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்துக்கு உண்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். சில சமயங்களில் உடல் அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படும்.

எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போது கடினமாக பயிற்சி மேற்கொள்வேன். வரும்காலத்திலும் இதனை பிரதிபலிப்பேன். இதனால், என்னுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆனாலும், அதனை பற்றி நான் சிந்திப்பது இல்லை.  இவ்வாறு அமீர்கான் தெரிவித்தார்.

அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியாகி வசூலை வாரி குவித்த ‘தங்கல்’ படம், மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



    Tags :    
நடிகர் அமீர்கானின் 52–வது பிறந்தநாள் குடும்பத்தினருடன் ‘ கொண்டாடினார்,Aamir Khan to spend 52nd birthday with the Phogat girls, gorge over ... நடிகர் அமீர்கானின் 52–வது பிறந்தநாள் குடும்பத்தினருடன் ‘ கொண்டாடினார்,Aamir Khan to spend 52nd birthday with the Phogat girls, gorge over ... நடிகர் அமீர்கானின் 52–வது பிறந்தநாள் குடும்பத்தினருடன் ‘ கொண்டாடினார்,Aamir Khan to spend 52nd birthday with the Phogat girls, gorge over ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்-'மைனா' நந்தினி உருக்கம்
என்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமாக பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும் தான் காரணம் என்று

மேலும்...

 பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது’ நடிகை கங்கனா ரணாவத்
‘‘பாலியல் தொல்லை குறித்து பேசுவதற்கு பெண்கள் பயப்பட கூடாது’’ என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.‘‘பாலியல் தொல்லை குறித்து பேசுவதற்கு பெண்கள் பயப்பட கூடாது’’ என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.இந்தி திரைப்பட இயக்குனர் விகாஸ் பால் மீது அவரது திரைப்பட

மேலும்...

 மேடை கச்சேரிகளில் ‘‘இளையராஜா பாடல்களை இனிமேல் பாட மாட்டேன்’-எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்...

 நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மரணம்
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன். இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நே‌ஷனல் பட நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் உள்பட பல படங்களை தயாரித்து உள்ளார். கமல்ஹாசனும் அவரது மகள் சுருதிஹாசனும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in