tamilkurinji logo
 

தவறி விழுந்ததாக நாடகம் ஆடி சொத்துக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தவறி விழுந்ததாக நாடகம் ஆடி சொத்துக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது

First Published : Monday , 19th June 2017 12:40:18 PM
Last Updated : Monday , 19th June 2017 12:40:18 PM


தவறி விழுந்ததாக நாடகம் ஆடி சொத்துக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

செங்கோட்டை அருகே சொத்துக்காக மாமியாரை அடித்துக் கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.


செங்கோட்டை அருகிலுள்ள புளியரை பகவதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு, கூலி தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி (80). கணவர் இறந்த பின் கூலி வேலை செய்து வந்தார்.


இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகள்கள் வெளியூரில் வசிக்கின்றனர்.


மாற்றுத் திறனாளியான மகன் குமார் (45) மட்டும் ருக்மணி வீட்டை ஒட்டிய பகுதியில் மனைவி வசந்தி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளோடு வசித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று இரவு ருக்மணி தூங்கும்போது கட்டிலில் இருந்து விழுந்து விட்டதாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிவதாகவும், வசந்தி பக்கத்து வீட்டு வாலிபரை அழைத்து ஆம்புலன்சிற்கு தகவல் சொல்லியுள்ளார்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ருக்மணி இறந்தார்.

இந்நிலையில் ருக்மணியை அவரது மருமகள் அடித்து கொலை செய்து விட்டதாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே  வசந்தியை (42) பிடித்து விசாரணை செய்ததில் மாமியாரை சொத்துக்காக கட்டையால் தாக்கி விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

உடனடியாக வசந்தியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் செங்கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது



  Tags :  
தவறி விழுந்ததாக நாடகம் ஆடி சொத்துக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தவறி விழுந்ததாக நாடகம் ஆடி சொத்துக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தவறி விழுந்ததாக நாடகம் ஆடி சொத்துக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2 வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
கருங்கல் அருகேயுள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் என்ற தாஸ் (57) பில்லி, சூனியம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மனைவிக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில்

மேலும்...

 மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு
மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் மாநில பாட திட்டத்தில்

மேலும்...

 ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிச்சயம் சட்ட சபை தேர்தல் வரும் : ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேலும்...

 பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்னார்.பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்கும். என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.  பொறியியல் படிப்பில் சேருவதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in