tamilkurinji logo
 

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1

Tamil,Nadu,govt,to,begin,smart,card,distribution,from,April,1


செய்திகள் >>> தமிழகம்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு

First Published : Monday , 20th March 2017 10:17:36 AM
Last Updated : Monday , 20th March 2017 10:17:36 AM


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1


 தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் முறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில் ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இப்பணி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 100 சதவீதம் முடிந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில் 75 முதல் 85 சதவீதம் முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணி மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.

தொடர்ந்து வரும் 28, 29ம் தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பின்னர், இந்த கார்டுகளை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும்போது விற்பனையாளர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை வழங்கும்போது பழைய ரேஷன் கார்டில் கேன்சல் சீல் அடித்து அட்டைதாரர்களிடம் திருப்பி வழங்க வேண்டும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன் விற்பனையாளர்கள் அதை பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின்னர் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1 தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1 தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்லூரி பேராசிரியை கழுத்தை நெரித்து படுகொலை
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குருமந்தூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.இ. படித்து முடித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி மஞ்சுளா (25). இவரும் எம்.இ. படித்து முடித்து விட்டு

மேலும்...

 ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மகாய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை,

மேலும்...

 இன்று அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
அதிமுக அணிகள் இன்று இணைக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அவசரமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புகிறார்.அதிமுகவில் பிளவு பட்டுள்ள இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று  அவசரமாக சென்னை

மேலும்...

 இன்று நண்பகல் ஓபிஎஸ்-ஈபிஸ் சந்திப்பு? இரு அணிகள் இணைக்கப்படுவதாக தகவல்
இன்று நண்பகல் ஓ பன்னீர் செல்வமும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த பிப்ரவரி 7-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரிவதற்கான காரணத்தை தடாலடியாக வெளியிட்டார். அதன்பிறகு முதல்-

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in