tamilkurinji logo
 

தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> தமிழகம்

தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது

First Published : Monday , 20th March 2017 11:16:23 AM
Last Updated : Monday , 20th March 2017 11:16:23 AM


தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news

சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை அசோக் நகர் பகுதியில் இரவில் தனியாக சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக அசோக் நகர் காவல் நிலையத்திறகு தொடர் புகார் வந்தது.


அதன்படி உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் புகார் வந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர்.


அப்போது மூன்று வாலிபர்கள் ஸ்கூட்டரில் வந்த பெண்களிடம் செல்போன் மற்றும் கை பைய் பறித்து செல்வது பதிவாகி இருந்தது.


முகம் தெளிவாக இல்லாததால் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்த போது, நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் (26) என்பவருக்கு சொந்தமான என தெரியவந்தது.


இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சதீஷ் தனது நண்பர்களான ஜாபர்கான் பேட்டையை ேசர்ந்த அண்ணை சத்தியா நகரை சேர்ந்த முனியப்பன் (18), அதே பகுதியை சேர்ந்த தீவாகர் (17) ஆகியோருடன் சேர்ந்து இரவு 8 மணிக்கு மேல் தனியாக சாலையில் நடந்த செல்லும் இளம் பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் கைபையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் பணம், 3 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.


தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மகாய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை,

மேலும்...

 போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ் இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்த சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மன்னார்குடி ஆட்களை வெளியேற்றிபின் போலீஸ் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட

மேலும்...

 ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்து அணிகளை இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று

மேலும்...

 மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும் அ.தி.மு.க. இணைப்பு பற்றி முதல்-அமைச்சர் சூசகம்
ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த கட்சியையோ ஆட்சியையோ அசைக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கடலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: அதிமுகவின் கற்பக விருட்சம் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in