முகப்பு இலக்கியம் மகளிர் பக்கம் ஜோதிடம் ஆன்மீகம் பூஜைகள் மந்திரங்கள் வாஸ்து விரத நாட்கள்
தின பலன் குருபெயர்ச்சி பலன் ஆண்டுபலன் ஃபெங் சூயி நியூமராலஜி திருமண பொருத்தம் ராசி கல்
 
வாஸ்து குறிப்புகள்

அழகிய மலர்கள்

image

அழகிய மலர்களை வைக்க சிறந்த இடம் வீட்டின் அல்லது அறையின் வடக்கு பாகம். மலர்களை வைக்கும் ஜாடியில் நீர் சுத்தமாகவும் மலர்கள் வாடாமலும் பார்த்து கொள்ள வேண்டும். மலர்கள் தொழில்ரீதியான அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்
 

மேஜை
image

வேலை செய்யும் மேஜை சுத்தமாக இருந்தால் அது தெளிவான சிந்தனைக்கு வழிவகுக்கும், ஆக்கபூர்வமான அறிவையும் வளர செய்யும் மேலும் செல்வமும், அதிர்ஷ்டமும் பெருகும். மேஜை மேலே கணிணி, தொலை பேசி, தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கோப்புகள் மட்டும் வைத்திருக்க வேண்டும்

தண்ணீர் குழாய்

குளியல் அறை மற்றும் அடுப்படியில் இருக்கும் குழாய்கள் எப்பொழுதும் நீரை சொட்டி கொண்டு இருக்ககூடாது எப்பொழுதும் நீரை சொட்டி கொண்டிருக்கும் நிலை தீய சக்தியை உருவாக்கும். வீணாகும் நீர் செல்வம் வெளியேறுவதை குறிக்கும்.
 

குப்பை தொட்டி

குப்பை தொட்டி களை சுத்தமாகவும், கண்களில் தென்படாமலும் வைக்க வேண்டும். தேக்கம் அடைந்த சக்தியின் ஒரு பரிமாணம் துர்நாற்றம் ஆகும். துர்நாற்றங்கள் விட்டின் செல்வ சக்திகளை மாசுபடவைத்துவிடும்
 

இறந்த செடிகள்

நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த செடிகள் வீட்டைசுற்றி இருந்தால் அது எதிர்மறையான சக்திகளை துண்டிவிடும். செடி வாடத்துவங்கினால் அதை காப்பாற்ற முயலுங்கள், முடியாதென்று தோன்றினால் அதை அகற்றி விட்டு வேறொரு நல்ல செடியை வைக்க வேண்டும்.
 

சமையலறை

சமையலறையில் இயற்கை வெளிச்சம் அதிகமாக இருக்க வேண்டும். அடைசலாக அமைக்கபட்ட சமையலறை செல்வ வளர்ச்சியை பாதிக்கும்.
 

1..2..3..

 
 
 
 
 
 
         
 


 


Home News Cinema Gallery About us Contact us Free Ads