tamilkurinji logo
 

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி முழுக்க காண்டம் மெஷின்,காமன்வெல்த்,போட்டிக்காக,டெல்லி,முழுக்க,காண்டம்,மெஷின்,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

condom,condom,machine,காமன்வெல்த்,போட்டிக்காக,டெல்லி,முழுக்க,காண்டம்,மெஷின்,காமன்வெல்த்,போட்டிக்காக,டெல்லி,முழுக்க,காண்டம்,மெஷின்,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

செய்திகள் >>> இந்தியா

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி முழுக்க காண்டம் மெஷின்

Wednesday , 4th August 2010 04:52:37 PM

search
காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி முழுக்க காண்டம் மெஷின்,
காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கில் டெல்லி வரவுள்ள வெளிநாட்டினரின் வசதிக்காக ஓட்டல்கள், மைதானங்கள் மற்றும் முக்கிய இடங்களில் ஆணுறை வழங்கும் இயந்திரங்களை பொருத்த தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

காமன்வெல்த் போட்டியின்போது வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் டெல்லியில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. கட்டுப்பாடு நடவடிக்கையில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (நாகோ) தீவிரமாக இறங்கி உள்ளது. இதுகுறித்து அதன் பொது இயக்குநர் சந்திரமெளலி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:

டெல்லியில் ஓட்டல்கள், மைதானங்கள், காமன்வெல்த் கிராமம், வீரர்கள் பயிற்சி பெறும் இடங்கள் உட்பட எல்லா முக்கிய இடங்களிலும் ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. இவற்றில் இருந்து இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி காண்டம்களை பெறலாம். இதுதொடர்பாக டெல்லி மாநில அரசு உட்பட பல்வேறு அரசு நிர்வாகங்களுடன் பேசி வருகிறோம்.

ஆணுறை வர்த்தக திட்டம்-3ஐ விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்படி நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 370 மாவட்டங்களில் ஆணுறை இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. மொத்தம் 80 கோடி மக்களை அடையும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற மக்களை அதிகம் சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

‘நாகோ’வின் விரிவான திட்டங்களால் 2002ம் ஆண்டில் 0.45 சதவீதமாக இருந்த பெரியவர்களுக்கான எச்.ஐ.வி. பரவல், இப்போது 0.32 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் நாட்டில் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. ஆகியவற்றுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 27.3 லட்சத்தில் இருந்து 23.1 லட்சமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்













பிற செய்திகள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in