tamilkurinji logo
 

நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் ,NEET 2017 Results Likely to be Declared by CBSE Today tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news நீட்,தேர்வு,முடிவு,20-ந்தேதி,வெளியாக,வாய்ப்பு,உள்ளதாக,தகவல்,,NEET,2017,Results,Likely,to,be,Declared,by,CBSE,Today,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

நீட்,,,தேர்வு,,,முடிவு,,,20-ந்தேதி,,,வெளியாக,,,வாய்ப்பு,,,உள்ளதாக,,,தகவல்,,,NEET,,,2017,,,Results,,,Likely,,,to,,,be,,,Declared,,,by,,,CBSE,,,Today,,,tamil,,,news,,,india,,,news,,, tamil,,,seithigal,,,india,,,seithigal,,,,,,tamil,,,cinema,,,news ,நீட்,தேர்வு,முடிவு,20-ந்தேதி,வெளியாக,வாய்ப்பு,உள்ளதாக,தகவல்,,NEET,2017,Results,Likely,to,be,Declared,by,CBSE,Today,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news நீட்,தேர்வு,முடிவு,20-ந்தேதி,வெளியாக,வாய்ப்பு,உள்ளதாக,தகவல்,,NEET,2017,Results,Likely,to,be,Declared,by,CBSE,Today,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

செய்திகள் >>> இந்தியா

நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்

Thursday , 15th June 2017 07:51:32 PM

search
நீட் தேர்வு முடிவு 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் ,NEET 2017 Results Likely to be Declared by CBSE Today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.சி. தயாராகி வரும் நிலையில் இன்று, தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.


இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வரும் 20-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதி காண் நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பேரில் நாடு முழுவதும் கடந்த மாதம் 7-ந்தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 8 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் மாறுபாடு இருந்ததால் நீட் தேர்வில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நீட் தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்தது. அந்த தடையை கடந்த திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து அறிவித்தது.

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.சி. தயாராகி வருகிறது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் விடைத்தாள் நகல் சி.பி.எஸ்.இ. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று, தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக வரும் 20-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக மத்திய கல்வி வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கும்.

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்















பிற செய்திகள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in