tamilkurinji logo
 

குடியரசுத் தலைவர் வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜ் அறிவிக்கப்பட வாய்ப்பு ,Sushma Swaraj For President? NDA Nominee to be Finalised Soontamil news india news tamil seithigal india seithigal tamil cinema news குடியரசுத்,தலைவர்,வேட்பாளராக,சுஷ்மா,ஸ்வராஜ்,அறிவிக்கப்பட,வாய்ப்பு ,Sushma,Swaraj,For,President?,NDA,Nominee,to,be,Finalised,Soontamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

குடியரசுத்,,,தலைவர்,,,வேட்பாளராக,,,சுஷ்மா,,,ஸ்வராஜ்,,,அறிவிக்கப்பட,,,வாய்ப்பு Sushma,,,Swaraj,,,For,,,President?,,,NDA,,,Nominee,,,to,,,be,,,Finalised,,,Soontamil,,,news,,,india,,,news,,, tamil,,,seithigal,,,india,,,seithigal,,,,,,tamil,,,cinema,,,news ,குடியரசுத்,தலைவர்,வேட்பாளராக,சுஷ்மா,ஸ்வராஜ்,அறிவிக்கப்பட,வாய்ப்பு ,Sushma,Swaraj,For,President?,NDA,Nominee,to,be,Finalised,Soontamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news குடியரசுத்,தலைவர்,வேட்பாளராக,சுஷ்மா,ஸ்வராஜ்,அறிவிக்கப்பட,வாய்ப்பு ,Sushma,Swaraj,For,President?,NDA,Nominee,to,be,Finalised,Soontamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

செய்திகள் >>> இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜ் அறிவிக்கப்பட வாய்ப்பு

Thursday , 15th June 2017 07:27:06 PM

search
குடியரசுத் தலைவர் வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜ் அறிவிக்கப்பட வாய்ப்பு
,Sushma Swaraj For President? NDA Nominee to be Finalised Soontamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார்? என்பதில் பா.ஜனதா கூட்டணியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலை பெற்று உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

  தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25–ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி விட்டது.

14–வது ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் கமி‌ஷன் சார்பாக பாராளுமன்ற தலைமைச் செயலாளர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கின.

ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 17–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஜூலை 20–ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.



ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளும் ஏற்ககூடிய பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதில் ஒருமனதாக முடிவு ஏற்படவில்லை என்றால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை நிறுத்தும்.

பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட மூவர் குழுவை கடந்த 12–ந்தேதி அமைத்தார்.


இந்த குழு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தும். இக்குழுவானது நாளை காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளும் குழுவை தொடங்கியது, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகளுடன் மூவர் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் அவர் வருகிற 23–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் எனவும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போதுவது யார் என்பது பற்றி தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ரகசியம் காத்து வருகின்றன. எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுபற்றிய தெளிவான நிலை தோன்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார்? என்பதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலை பெற்று உள்ளார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளதாக ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

 ஜனாதிபதி வேட்பாளருக்கு பா.ஜனதா வகுத்து உள்ள அனைத்து தகுதிகளிலும் முதன்மையிடம் பிடித்து இருப்பவர் சுஷ்மா சுவராஜ். நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சித்தராம் யச்சூரியை சந்திக்கும் போது பா.ஜனதா குழுவில் இடம்பெற்று உள்ள தலைவர்கள் சுஷ்மா பெயரை அறிவிப்பது தொடர்பாக பேசுவார்கள் எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.


சுஷ்மா சுவராஜ் ஒரு வெற்றி வேட்பாளராக இருக்கிறார் என்பதே அனைத்து தரப்பு கருத்தாக உள்ளது. சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பிராந்திய கட்சிகளிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா பானர்ஜி மற்றும் நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் சுஷ்மா சுவராஜை எதிர்ப்பதை கடினமானதாக கொள்வார்கள் என உயர்மட்ட தலைவர் கூறிஉள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

இருப்பினும் வேட்பாளர் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற அரசியல் கட்சிகளாலும் சுஷ்மா சுவராஜ் நடுநிலையான வேட்பாளராக பார்க்கப்படுவார் எனவும் தெரிகிறது.

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்













பிற செய்திகள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in