Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos
Subamankalam

சாக்லேட் சாப்பிட்டால் குறைபிரசவம் ஆகாது

Saturday , 10th July 2010 08:31:19 PM

சாக்லேட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 70 சதவித இதய நோயை குறைக்கும் என்றும், புற்று நோய் வராமல் தடுக்கும் என்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவம் நடைபெறு வதில்லை என்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2500 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வை மேற் கொண்ட னர். சாக்லேட் தொடர் பான பானங்கள், மற்றும் பொருட்களை சாப்பிட்ட வர்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவது வெகுவாக குறைந்து காணப்பட்டது.

பொதுவாக, வலிப்பு நோய், ரத்தம் உறைதல், கல்லிரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு போன்ற வற்றினால்தான் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப் பட்டு இறக்கின்றன. இதன் மூலம்தான் குறைப் பிரசவமும் நிகழ்கிறது. இதன் மூலம் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

ஆனால் சாக்லேட்டில் உள்ள ரசாயண பொருட்கள் இது போன்ற கோளாறு களை நீக்க உதவுகின்றன என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, கர்ப்பிணிகள் வாரத்துக்கு 3 நாட்களாவது சாக்லேட் சாப்பிட வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

மேலும்...

Tags :,சாக்லேட்,சாப்பிட்டால்,குறைபிரசவம்,ஆகாது,,

Forward to your Friend...சாக்லேட்,சாப்பிட்டால்,குறைபிரசவம்,ஆகாது,,,tamil news  தமிழ் செய்திகள்  tamilkurinji


Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match