Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos

 
சீன நாணயங்கள் (I Ching Coin)

வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்க சிவப்பு நிற நூலிலோ அல்லது ரிப்பனிலோ கட்டப்பட்ட சீன தேசத்து ஐசிங் நாணயங்களை கதவின் உட்பக்க கைப்பிடியில் மாட்டவும். பண வாய்ப்புகள் பெருக இந்த நாணயங்களை பர்ஸ், ஹேண்ட்பேக், சூட்கேஸ், பீரோ, பாதுகாப்பு பெட்டகம் ஆகிய இடங்களில் வைத்துக்கொள்ளலாம்.
 
"செல்வக் குபேரன்" அல்லது "சிரிக்கும் புத்தர்"

"செல்வக் குபேரன்" செல்வக் கடவுள்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்த சிலையை வீட்டில் வைத்தால் வெற்றி, தனலாபம், செல்வம், அமைதி பெருகும். சிலை முன் வாசலை நோக்கி இருக்கும் படி வைக்க வேண்டும். முன் வாசல் வழியாக நுழையும் சக்தி சிரிக்கும் புத்தரால் வரவேற்கப்பட்டு வெகுவாக தூண்டப்படுவதால் மிகுந்த அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் சேர்க்கிறது.
 
செல்வத்தவளை

மூன்று கால் செல்வத்தவளை செல்வ செழிப்பை அளிக்கவல்லது.
இதை வீட்டில் வைத்தால் நிலம் வீடு போன்ற அசையா சொத்துக்கள் சேரும். செல்வத்தவளையின் வாயில் சீன நாணயம் இருக்கும் இதை வீட்டிற்குள் பார்ப்பது போல அதாவது பணத்துடன் வீட்டிற்குள் நுளைவது போல வைக்க வேண்டும்.
 
மேன்டரின் வாத்துகள்

இது சீன தேசத்தில் காதல் சின்னமாகும். இதை வீட்டின் தென்மேற்கு மூலையிலோ அல்லது படுக்கையறையின் தென்மேற்கு மூலையிலோ வைத்தால் தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடக்கும். காதல் கைகூடும். பிரிந்த தம்பதியர் இணைவர்.
 
டிராகன்

டிராகன் யாங் (Yang) சக்தியைக் குறிப்பதாகும். இதை வீட்டில் அலுவலகத்தில் கிழக்குப் பகுதியில் வைத்தால் அதிர்ஷ்ட்டத்தைக் கொடுக்கும்.
 
மூங்கில் செடி

இது நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நிலையையும் அதிர்ஷ்டத்தையும்
குறிக்கிறது. உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் மூங்கில் செடிகளை வளர்ப்பதன் மூலமோ அல்லது மூங்கில் செடி படம் மாட்டுவதன் மூலமோ சக்தியூட்டலாம்.
குழல் மணிகள் (Wind Chimes)

வீட்டில் அதிர்ஷ்டத்தை வளப்படுத்தும் அற்புத சக்தி குழல் மணிக்கு உண்டு. இது நல்ல அதிர்ஷ்டத்தை பெருக்கவும் துரதிர்ஷ்டத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
 

 




Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads